close
முகப்பு கூகுள் நிறுவனத்தின் மிதிவண்டிகள் மாயம்

கூகுள் நிறுவனத்தின் மிதிவண்டிகள் மாயம்

 கூகுள் நிறுவனத்தின் மிதிவண்டிகள் மாயம்

தொழில்நுட்ப நிறுவனங்களின் ஜாம்பவானான  கூகுள் நிறுவனத்தில் இருந்து வாரம் 100 முதல் 250 மிதிவண்டிகள் மாயமாவது தெரியவந்துள்ளது. 

பொதுவாக அதிக பரப்பளவை கொண்ட நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொன்றிக்கு செல்வதற்கு மிதிவண்டிகள் பயன்படுத்தப்படும். இதனை அந்நிறுவனமே வழங்கும். அதுபோன்று சிலிகான் வேலியில் உள்ள கூகுள் நிறுவனத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்டது. அதன்பிறகு ஆப்பிள், ஃபேஸ்புக், வால்மார்ட் போன்ற நிறுவனங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. 

கூகுள் சுமார் 1,100 மிதிவண்டிகளை நிறுவன ஊழியர்களின் பயன்பாட்டிற்கு அளித்துள்ளது.  தற்போது , அதில் வாரம் 100 முதல் 250 மிதிவண்டிகள் மாயமாகி வருவதை அந்நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.  ஜி-பைக் என அழைக்கப்படும் இந்த மிதிவண்டிகள் காணாமல் போவது வழக்கமாகிவிட்டது. தொலைந்து போன ஜி-பைக்குகள் அருகே உள்ள பூங்கா மற்றும் பப்பின் மேற்கூறைகளிலும் காணப்பட்டது.  அந்நிறுவனம் 30 பேர் கொண்ட ஒரு குழுவை காணாமல் போன மிதிவண்டிகளை மீட்பதற்காக நியமித்துள்ளது. 

ஜூலையிலிருந்து நவம்பர் வரை 70 முதல் 190 ஜி-பைக்குகளை மீட்டிருக்கிறது இந்த குழு. ஆனால், தற்போது வரை எப்படி இந்த மிதிவண்டிகள் காணாமல் போகின்றன என்று கண்டுபிடிக்கவில்லை. பொதுவாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் திருடர்கள் இதை செய்திருக்க முடியாது என யூகித்துள்ளது. 

ஏற்கனவே ஜி-பைக்குகளில் ஜி.பி.எஸ் ட்ராக்கர்களை பொருத்தி இருந்தாலும்,  ஜி-பைக்கை ஊழியர்களின் கைபேசி மூலமாக திறக்க வைக்கும் மென்பொருளும் சோதனையில் உள்ளாதாக அறிவித்துள்ளது கூகுள்.