close
முகப்புகையொப்பம் இட்ட எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை: முதலமைச்சர்  பழனிச்சாமி 

கையொப்பம் இட்ட எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை: முதலமைச்சர்  பழனிச்சாமி 

January 12, 2018 296Views
கையொப்பம் இட்ட எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை: முதலமைச்சர்  பழனிச்சாமி 

கடந்த 10 மாதங்களில் மட்டும் இதுவரை 4,903  கோப்புகளில் கையொப்பம் இட்டுள்ளதாகவும், எனவே இதுவரை எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநரின் உறைக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்யும் எனவும், தமிழ்கத்தில் தான் அரசு மருத்துவமனையில் அதிகளவில் உறுப்பு மாற்று சிகிச்சை நடைபெற்று வருவதாக கூறினார். 

மேலும் பின் தங்கிய மாணவர்களும் சட்டக்கல்வி பயிலும் வகையில் ராமநாதபுரம், விழுப்புரம், தருமபுரி மாவட்டங்களில் சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

கடந்த 10 மாதங்களில் மட்டும் இதுவரை 4,903 கோப்புகளில் கையொப்பம் இட்டுள்ளதாகவும், எனவே இதுவரை எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை என முதலமைச்சர் பழினிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.