close
முகப்புகொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

October 12, 2017 103Views
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சித்தூர் மாவட்டம், அம்மப்பள்ளி அணையிலிருந்து இரவு 10 மணி முதல் விநாடிக்கு 1300 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு எற்ப்பட்டுயுள்ளது. 

இதனை தொடர்ந்து கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவுறுத்தியுள்ளார். மேலும்,  நெடியம், வெளியகரம், சமந்தவாடா தரைப்பாலத்தை கடக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பு பணியில் வருவாய் துறை, தீயணைப்பு துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் ஆட்சியர் சுந்தரவதெரிவித்துள்ளார்.