close
முகப்புகொடுங்கையூர் தீவிபத்து : தீயணைப்பு வீரரின் உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம்

கொடுங்கையூர் தீவிபத்து : தீயணைப்பு வீரரின் உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம்

July 17, 2017 93Views
கொடுங்கையூர் தீவிபத்து :  தீயணைப்பு வீரரின் உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம்

சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த தீயணைப்பு படை வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

சென்னை அருகே கொடுங்கையூரில் உள்ள பேக்கரியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏகராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கொண்டிருந்தனர். அப்போது பேக்கரியில் உள்ள சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்பு படை வீரர் ஏகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

ஏகராஜின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சென்னையில் இருந்து விருதுநகர் அருகே உள்ள அவரது சொந்த ஊரான தடங்கம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.