close
முகப்புகோபாலபுரம் சென்று கருணாநிதியை உடல் நலம் விசாரித்தார் மோடி 

கோபாலபுரம் சென்று கருணாநிதியை உடல் நலம் விசாரித்தார் மோடி 

November 06, 2017 184Views
கோபாலபுரம் சென்று கருணாநிதியை உடல் நலம் விசாரித்தார் மோடி 

சென்னை வந்த பிரதமர் மோடி, கோபாலபுரம் சென்று தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். 

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியை முடித்த பிரதமர், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு சென்றார். அங்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். 

பின்னர், கருணாநிதியை சந்தித்த பிரதமர் மோடி, உடல் நலம் பற்றி விசாரித்தார். டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுக்க வருமாறு கருணாநிதிக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். 

இதைத்தொடர்ந்து முரசொலி பவளவிழா மலரை பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி பரிசாக வழங்கினார்.