close
முகப்புசபாநாயகர் - ஆஸ்திரேலியா பயணம் 

சபாநாயகர் - ஆஸ்திரேலியா பயணம் 

November 11, 2017 193Views
சபாநாயகர் - ஆஸ்திரேலியா பயணம் 

அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் இன்று நியூ சவுத் வேல்ஸ் சட்டப்பேரவை துணைத் தலைவர் ஆண்ட்ரூ ஃபிரேஷர், துணைக் கொறடா மெலானி ஜிபான்ஸ் சந்தித்துப் பேசினார்.

63வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக பாங்களாதேஷ் தலைநகர் டாக்கவிற்கு கடந்த வாரம் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் பயணம் மேற்கொண்டார். கடந்த 4 தேதியிலிருந்து 8ம் தேதி வரை நடைபெற்ற அம்மாநாட்டில் கலந்துகொண்டபின்னர் நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு ஆய்வுப்பயணம் மேற்கொண்டார். 

இன்று நியூ சவுத் வேல்ஸ் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ஆண்ட்ரூ ஃபிரேஷர் மற்றும் அரசு துணைக்கொறடா மெலானி ஜிபான்ஸ் சந்தித்துப் பேசினார். அப்போது நியூ சவுத் வேல்ஸ் சட்டப்பேரவை நடைமுறைகளை கேட்டறிந்தார்.