close
முகப்புசமாதிக்கு போறத நிறுத்துங்க...ஜெயலலிதாவின் மாண்பு காக்கப்படும்

சமாதிக்கு போறத நிறுத்துங்க...ஜெயலலிதாவின் மாண்பு காக்கப்படும்

சமாதிக்கு போறத நிறுத்துங்க...ஜெயலலிதாவின் மாண்பு காக்கப்படும்

அடிக்கடி சமாதிக்கு செல்வதை அமைச்சர்கள் நிறுத்திக்கொண்டால் ஜெயலலிதாவின் மாண்பு காக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப் பேரவையில் திறக்கப்பட்டது பல்வேறு கருத்து வேறுபாடு இருந்தாலும் அவரை முதல்வராக தான் பார்க்கவேண்டும். விமர்சனங்கள் தேவை இல்லை என்பது எனது கருத்து. 

காவி என்பது ஒரு நிறம் சுயநலம் இல்லாதவர்கள் ஏற்றுக்கொண்ட நிறம்  தான்  காவி . கமல் காவிக்கு மாரமாட்டேன் என்பது சுயநலம். காவியை கொச்சை படுத்தவேண்டாம்.

தமிழகத்தில் எந்த ஆலயத்தையும் அரசு கையகப்படுத்த கூடாது. ஜெயலலிதா படம் திறப்பை வைத்து திமுக அரசியல் செய்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட  தீ விபத்து குறித்து முறையான விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தமிழ் மொழிதான் முக்கியத்துவம். எனத் தெரிவித்தார்