close
முகப்புசரக்குபெட்டக லாரியில் தீ விபத்து : ஓட்டுநர் பலி 

சரக்குபெட்டக லாரியில் தீ விபத்து : ஓட்டுநர் பலி 

October 12, 2017 144Views
சரக்குபெட்டக லாரியில் தீ விபத்து : ஓட்டுநர் பலி 

தூத்துக்குடி துறைமுகத்தில் மின்சாரம் பாய்ந்து சரக்குபெட்டக லாரி தீப்பற்றி எரிந்ததில் ஓட்டுனர் உடல் கருகி உயிரிழந்தார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்சியை சேர்ந்த லூர்த்துசாமி சரக்குபெட்டகத்தை லாரியில் ஏற்றிகொண்டு துறைமுக புறவழிசாலையில் உள்ள தனியார் சரக்குபெட்டக குடோனுக்கு சென்றுஉள்ளனார். 

அப்போது தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகே வந்தபோது, லாரியை நிறுத்துவிட்டு ஒட்டுனர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது உயர்மின்கம்பி லாரியின் மீது இருந்த சரக்குபெட்டகத்தில் உரசியுள்ளது. 

இந்தநிலையில் டிரைவர் லூர்த்துசாமி கழிவறைக்கு சென்றுவிட்டு மீண்டும் லாரியில் ஈரக்காலுடன் ஏறி உள்ளார். இதனால் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருந்து லாரியில் ஏறியவுடன் டிரைவர் மீது மின்சாரம் தாக்கி தீப்பற்றி உள்ளது எரிந்துள்ளது. 

இதைகண்டு அருகில் இருந்தவர்கள் காப்பற்ற முயற்சிசெய்வதற்குள் டிரைவர் லூர்த்துசாமி முழுவதும் எரிந்து பலி ஆகியுள்ளார். இதைதொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புதுறையினார் தீயை அணைத்து பலியான லூர்த்துசாமி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்