close
முகப்புசிறையில் இருந்து தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

சிறையில் இருந்து தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

August 13, 2017 106Views
சிறையில் இருந்து தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

எதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என பெங்களூரு சிறையில் இருந்து தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடித்தில், எக்கு கோட்டையில் விரிசல் விழாதா, தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என நமது எதிரிகள் எண்ணுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் 3வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் இயக்கம் சிறிதளவும் கீழே இறங்கிவிடகூடாது என்று சசிகலா தெரிவித்துள்ளார். 

முன்பை விட உறுதியாய் கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்.ஜி.ஆர். நூற்றாண்டில் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ள சசிகலா, ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணர்வோமோ, அதன் உணர்வை இனியும் உணரலாம் என கடிதத்தில் கூறியுள்ளார்.