close
முகப்புசிலையை கடத்தி விற்க முயன்ற, பொறியாளர் கைது 

சிலையை கடத்தி விற்க முயன்ற, பொறியாளர் கைது 

October 12, 2017 198Views
சிலையை கடத்தி விற்க முயன்ற, பொறியாளர் கைது 

காஞ்சிபுரம் அருகே நாயனார் சிலையை கடத்தி விற்க முயன்ற, பொறியாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்

காஞ்சிபுரம் அடுத்துள்ள பாலுசெட்டிசத்திரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிலைகடத்தல் கும்பல் ஒன்று தாங்கள் கடத்திய சிலையை விற்க முயன்றனர். அப்போது உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐ.ஜி பொன் மானிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு போலிஸார்  அவர்கனை மடக்கி பிடித்து  கைது செய்தனர். 

பின்னர் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரையும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.