close
முகப்புசிவகாசியில் புளூவேல் விளையாடிய இளைஞனுக்கு நேர்ந்த பயங்கரம்..!

சிவகாசியில் புளூவேல் விளையாடிய இளைஞனுக்கு நேர்ந்த பயங்கரம்..!

October 13, 2017 172Views
சிவகாசியில் புளூவேல் விளையாடிய இளைஞனுக்கு நேர்ந்த பயங்கரம்..!

சிவகாசியில் புளுவேல் கேம் விளையாடி கழுத்து மற்றும் கைகளை அறுத்து கொண்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
சிவகாசி அருகே சித்துராஜபுரத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன். இவர் கடந்த 3 வாரமாக புளுவேல் கேம் விளையாடி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னாள் பெற்றோர் திட்டியதால் செல்போனை உடைத்துவிட்டார்.

மேலும் புளுவேல் கேமில் சிக்கிகொண்டு அவரால் வெளியே வரமுடியாததால் மதுபான கடையில் மது அருந்த சென்றுள்ளார். அங்கு கத்தியால் கழுத்து மற்றும் கைகளை அறுத்து கொண்டார் ஜெகதீஷ்வரன். உடனடியாக அருகில் இருந்த உறவினர்கள் ஜெகதீஷ்வரனை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.