close
முகப்புசுயநலத்திற்காக மட்டுமே வைரமுத்துவை விமர்சிக்கின்றனர்: ஸ்டாலின்

சுயநலத்திற்காக மட்டுமே வைரமுத்துவை விமர்சிக்கின்றனர்: ஸ்டாலின்

January 13, 2018 229Views
சுயநலத்திற்காக மட்டுமே வைரமுத்துவை விமர்சிக்கின்றனர்: ஸ்டாலின்

சிலர் தங்களது சுயநலத்திற்காக மட்டுமே கவிஞர் வைரமுத்துவை விமர்சித்து வருவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நாளிதழ் ஒன்றில் கவிஞர் வைரமுத்து எழுதி வெளியான கட்டுரையில், ஆண்டாள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையாக வெடித்தது. பாஜக தேசிய செயலர் எச்.ராஜா உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, பிறரை புண்படுத்தும்படியான கருத்துகளை தாம் கூறி இருந்தால் வருந்துவதாக வைரமுத்து தெரிவித்தார். இந்தநிலையில், வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சிலர் தங்களது சுயநலத்திற்காக மட்டுமே கவிஞர் வைரமுத்துவை விமர்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள்தான் காட்டியிருந்ததாரே தவிர, ஆண்டாள் குறித்து விமர்சிக்கவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வைரமுத்து மீதான தாக்குதலை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.