close
முகப்பு சுருதிஹாசன் இடத்தை பிடித்தாரா ? ஹன்சிகா..!

சுருதிஹாசன் இடத்தை பிடித்தாரா ? ஹன்சிகா..!

July 17, 2017 97Views
 சுருதிஹாசன் இடத்தை பிடித்தாரா ? ஹன்சிகா..!

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள 'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியதை அடுத்து ஹன்சிகா அப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸில் கான் திரைப்பட விழாவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள 'சங்கமித்ரா' படம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திரைப்படத்தில் சுருதிஹாசனை வைத்தே அனைத்து பணிகளும் நடைபெற்று வந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ருதிஹாசனுடன் 'சங்கமித்ரா' படத்தில் தொடர்ந்து பணிபுரிய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது" என்று படக்குழுவினர் அறிவித்ததை தொடர்ந்து இப்படத்தில் ஹன்சிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.