close
முகப்புசூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' தெலுங்கில் வெளியாவதில் சிக்கல்

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' தெலுங்கில் வெளியாவதில் சிக்கல்

January 09, 2018 284Views
சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' தெலுங்கில் வெளியாவதில் சிக்கல்

நடிகர் சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தெலுங்கில் வெளியிட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்துள்ளது. 

நடிகர் சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில்,  இந்த படத்தை வெளியிட தடை கோரி ஸ்டார் மூவீஸ் என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்  மேல் முறையீடு செய்யப்பட்டது.  

இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, தானா சேர்ந்த கூட்டம் படத்தை ஒப்பந்த விதிகளை மீறி தெலுங்கில் "டப்" செய்து வெளியிட உள்ளதால் இந்த படம் தெலுங்கில் வெளியாக தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நாளை ஒத்திவைத்தனர்.