close
முகப்புசென்னை காவல் ஆணையரிடம் விஷால் மனு

சென்னை காவல் ஆணையரிடம் விஷால் மனு

December 07, 2017 195Views
சென்னை காவல் ஆணையரிடம் விஷால் மனு

வேட்புமனுவில் தன்னை முன்மொழிந்து, காணாமல் போன 2 பேரை கண்டுபிடித்து தர கோரி சென்னை காவல் ஆணையரிடம் விஷால் மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு, அதே பகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிந்து கையெழுத்திட்டனர். வேட்புமனு பரிசீலனையின் போது விஷாலை முன்மொழிந்தவர்கள் தாங்கள் முன்மொழியவில்லை என்றும், போலியான எங்களது கையெழுத்து போடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரி முன்பு தெரிவித்தனர். இதனால், விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே, விஷால் வேட்பு மனுவை முன்மொழிந்த இருவரும் மாலை 3 மணிக்குள் தேர்தல் அலுவலரை சந்தித்து விளக்கம் அளிக்கும் பட்சத்தில் மனு மீது மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விஷாலை முன்மொழிந்து பின்பு மறுப்பு தெரிவித்த 2 பேரையும் காணவில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தான் தேர்தலில் போட்டியிடுவதை விட, காணாமல் போன இருவரின் பாதுகாப்பு மிக முக்கியம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்கள் இருவர் குறித்தும் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என கூறியுள்ளார்.