close
முகப்புசேகர் ரெட்டி விவகாரத்தில் வழக்கு போட்டால் சந்திக்க தயார் : பன்னீர்செல்வம்

சேகர் ரெட்டி விவகாரத்தில் வழக்கு போட்டால் சந்திக்க தயார் : பன்னீர்செல்வம்

August 07, 2017 131Views
சேகர் ரெட்டி விவகாரத்தில் வழக்கு போட்டால் சந்திக்க தயார் : பன்னீர்செல்வம்

சேகர் ரெட்டி விவகாரத்தில் தன் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயாராக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சிவகாசியில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் திமுக கைகோர்த்துக்கொண்டு மக்கள் பிரச்னையை சட்டப் பேரவையில் பேசுவதில்லை என்று குற்றம்சாட்டினார். 

மேலும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். அதேபோல், நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக அரசியல் குறித்து விமர்சிக்க அனைத்து உரிமையும் உள்ளது என்றும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், சேகர் ரெட்டி விவகாரத்தில் தன் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயாராக இருப்பதாகவும், சேகர் ரெட்டியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது ஒரு குற்றமா என்றும் கேள்வி எழுப்பினார்.