close
முகப்புசேகுவேரா கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நினைவு தினம்

சேகுவேரா கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நினைவு தினம்

October 09, 2017 160Views
சேகுவேரா கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நினைவு தினம்

பிரபல சோசலிசப் புரட்சியாளரான சேகுவேரா கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நினைவு தினம் கியூபாவில் நேற்று அனுசரிக்கப்பட்டது. 

அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா(ERNESTO GUVERA D LA SERNA) என்ற இயற்பெயரைக் கொண்ட சே குவேரா. மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்ட, இவர் புரட்சிகளில் ஈடுபட்டதற்காக பொலியாவில் 1967-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், சே குவேரா கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்று கியூபாவில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சே குவெராவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு, சிலை வைக்கப்பட்டிருக்கும் சாண்ட்டா கிளாராவில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.