close
முகப்புசேலத்தில்  200க்கும் மேற்பட்ட தெரு வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்

சேலத்தில்  200க்கும் மேற்பட்ட தெரு வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்

July 13, 2017 125Views
சேலத்தில்  200க்கும் மேற்பட்ட தெரு வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்

தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி, சேலத்தில்  200க்கும் மேற்பட்ட தெரு வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.ஐ.டி.யு.சி தெரு வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகளின் சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய தெரு வியாபாரிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநகராட்சி மற்றும் ஒப்பந்த அதிகாரிகள் இணைந்து தெரு வியாபாரிகளை மிரட்டி அதிக வசூல் செய்வதாக குற்றம் சாட்டினார்.