close
முகப்புஜந்தர் மந்தரில் விவசாயிகள் 2-ம் நாளாக நூதன போராட்டம்

ஜந்தர் மந்தரில் விவசாயிகள் 2-ம் நாளாக நூதன போராட்டம்

July 17, 2017 99Views
ஜந்தர் மந்தரில் விவசாயிகள்  2-ம் நாளாக நூதன போராட்டம்

விவசாயக்கடன் தள்ளுபடி,  காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள்  2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மோடியை சந்தித்து  கோரிக்கைகளை வலியுறுத்த சென்ற விவசாயிகள் வழியிலேயே டெல்லி காவல் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து விடுவிக்கப்பட்ட அவர்கள் தங்களின் உரிமைகளையும், கோரிக்கைகளையும் கேட்காத மத்திய அரசை கண்டித்து கைகளையும்,  கால்களை இரும்பு சங்கிலியால் கட்டிவிட்டது இந்த மத்திய, மாநில அரசுகள் என்பதை வலியுறுத்தும் நோக்கில் நூதன போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.