close
முகப்புஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது

GST, GSTcouncilmeet
November 10, 2017 224Views
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது

இந்த கூட்டத்தில் அன்றாட பயன்பாட்டுக்கான 200 பொருட்களின் வரிகள் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக 28 சதவிகித வரி விதிப்பில் உள்ள பொருட்களில் 80 சதவிகித பொருட்கள் 18 சதவிகித வரி விதிப்பில் கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும், குளியலறை பொருட்கள், கைக்கடிகாரம், சூட்கேஸ், வால்பேப்பர், எழுது பொருட்கள், பிளைவுட் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் வரிகள் குறைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்காரணமாக அவற்றின் விலைகள் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

முன்னதாக இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை கொண்டு வரும் வகையில் கடந்த ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரியை  மத்திய அரசு அறிமுகம் செய்தது. மேலும், இந்த வரி விதிப்பில் 5, 12, 18, மற்றும் 28 ஆகிய 4 வகையான சதவீதங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது