close
முகப்பு ஜெ.மரணம்: ஷீலா பாலகிருஷ்ணன் வாதம் முடிவு

ஜெ.மரணம்: ஷீலா பாலகிருஷ்ணன் வாதம் முடிவு

January 11, 2018 247Views
 ஜெ.மரணம்: ஷீலா பாலகிருஷ்ணன் வாதம் முடிவு

ஜெயலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜரானார். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என பலரிடம் விசாரணை நடந்து வருகிறது. 

அதன்படி, இன்று விசாரணை ஆணையம் முன்பு தமிழக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வந்தநிலையில் ஷீலா பாலகிருஷ்ணன் வாதம் முடிவடைந்தது.

ஷீலா பாலகிருஷ்ணன் முன்னதாக கடந்த டிசம்பர் 20-ம் தேதி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.