close
முகப்பு"டர்ட்டி பிக்சரை" தொடர்ந்து தேசிய விருதுக்காக ப்ளான் போடும் வித்யாபாலன்

"டர்ட்டி பிக்சரை" தொடர்ந்து தேசிய விருதுக்காக ப்ளான் போடும் வித்யாபாலன்

January 11, 2018 243Views
"டர்ட்டி பிக்சரை" தொடர்ந்து தேசிய விருதுக்காக ப்ளான் போடும் வித்யாபாலன்

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட நிகழ்ச்சியாகும்.

இந்தியாவின் ‘இரும்பு பெண்மணி’ என்றழைக்கப்பட்ட இந்திரா காந்தியின் வாழ்க்கையில் நிகழந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல  எழுத்தாளர்  சகாரிகா கோஷ், "இந்திரா" இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பிரதமர்’ என்ற நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். 

மறைந்த சில்க் ஸ்மிதா வேடத்தில் ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை வித்யா பாலன் இந்த நூலினை திரைப்படம் ஆக தயாரிப்பதற்கான உரிமையை ராய் கபூர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சகாரிகா கோஷிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை சகாரிகா கோஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திராவை வெள்ளித்திரையில் பார்ப்பதற்க பரவசத்துடன் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.