close
முகப்புடி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ தேர்வுகள் தொடங்கியது 

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ தேர்வுகள் தொடங்கியது 

August 06, 2017 142Views
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ தேர்வுகள் தொடங்கியது 

தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ  தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தமிழக அமைச்சுப் பணிகள், தலைமைச்செயலகப் பணிகள் மற்றும் சட்டப்பேரவைப் பணிகளில் உதவியாளர், கணக்கர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் சுமார்  ஆயிரத்து 953 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ தேர்வு அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் முன்னதாக வழங்கப்பட்டன. 

இந்நிலையில் விண்ணப்பித்த நபர்களுக்கான குரூப் 2ஏ தேர்வு இன்று நடைபெற்று றுகிறது. அதன்படி 1953 காலி பணியிடங்களுக்கு சுமார் 7.5 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதையடுத்து தேர்வில் வெற்றி பெறுவபர்களுக்கு பின்னர் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும்.