close
முகப்புடிஐஜி ரூபா பணியிட மாற்றதிற்கு எதிர்ப்பு: பெங்களூரு சிறையில் கைதிகள் போராட்டம்..!

டிஐஜி ரூபா பணியிட மாற்றதிற்கு எதிர்ப்பு: பெங்களூரு சிறையில் கைதிகள் போராட்டம்..!

July 17, 2017 103Views
டிஐஜி ரூபா பணியிட மாற்றதிற்கு எதிர்ப்பு: பெங்களூரு சிறையில் கைதிகள் போராட்டம்..!

கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா, போக்குவரத்து ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து பெங்களூரு சிறையில் கைதிகள் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிற்கு சிறையில் பல சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகாவும், அதற்காக டி.ஜி.பி சத்யநாராயண ராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக டி.ஐ.ஜி ரூபா புகார் தெரிவித்தார். 

இதையடுத்து அவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு  பெங்களூரு நகர போக்குவரத்து ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு சிறையில் கைதிகள் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.