close
முகப்புடெங்குவால்  அதிகரிக்கும் உயிரிழப்பு 

டெங்குவால்  அதிகரிக்கும் உயிரிழப்பு 

October 12, 2017 107Views
டெங்குவால்  அதிகரிக்கும் உயிரிழப்பு 

குமாரபாளையம் அடுத்துள்ள பள்ளிபாளைத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் வேலுமணி மகன் வாசிகன். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டது. 

காய்ச்சல் குணமடையாததால் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு படுக்கை இல்லை என கூறி திருப்பி அனுப்பி வைக்கபட்டதால் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டது. 

அங்கு சிகிச்சை பலனின்றி, வாசிகன் இறந்துவிட்டான் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று பொள்ளாச்சியில் 12 வயதுச் சிறுவன் டெங்குவிற்கு உயிரிழந்தார்.  சின்னாம்பாளையம் மலர்விழி நகரை சேர்ந்தவர்  தேன்மொழி. இவர் பொள்ளாச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களது 12 வயது மகன் ஜெர்வின் டெக்சன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிபட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில்  காய்ச்சல் அதிகமான காரணத்தால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போது டெங்கு காயச்சல் என உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  ஜெர்வின் டெக்சன் உயிரிழந்தார்.

இதேபோன்று சென்னை அம்பத்தூரில் டெங்குவிற்கு கல்லூரி மாணவி உயிரிழந்தார். அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் பூமதி. இவர் தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு நுண்ணுயிரியல் பிரிவில் படித்து வந்தார். 

கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிபட்டு வந்த பூமதி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் காலம் தாழ்த்தாமல் அரசு சார்பில் உடனடியாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் டெங்குவை கட்டுப்படுத்துவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அரசு தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் நாமக்கலில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.