close
முகப்புடெங்கு ஒழிய வேண்டும் என்றால் இந்த ஆட்சி ஒழிய வேண்டும்: ஸ்டாலின் பேட்டி

டெங்கு ஒழிய வேண்டும் என்றால் இந்த ஆட்சி ஒழிய வேண்டும்: ஸ்டாலின் பேட்டி

October 12, 2017 146Views
டெங்கு ஒழிய வேண்டும் என்றால் இந்த ஆட்சி ஒழிய வேண்டும்: ஸ்டாலின் பேட்டி

சென்னை கொளத்தூரில் பல்வேறு ஆய்வு பணிகளை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,  

டெங்கு காய்ச்சலுக்கு தமிழகம் முழுவதும் 15000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

திமுக எதிர்க்கட்சி என்ற முறையில் டெங்கு ஒழிப்பு பணியில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள். 
துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கொடுமைக்கெல்லாம் காரணம் உள்ளாட்சி அமைப்பு சரி இல்லாதது தான் என தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி யில் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகள் இருந்தால் தான் எல்லாம் சரியாக நடைபெறும்.இல்லை என்றால் இந்த நிலை தான். இந்த குதிரைபேர ஆட்சியால் எதுவும் நடைபெறாமல் உள்ளது. உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் கூட உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கிறது என குற்றம் சாட்டினார்.