close
முகப்புடெங்கு குறித்து ஆய்வு நடத்த மத்திய குழு தமிழகம் வருகை, ஓ.பன்னீர்செல்வம்

டெங்கு குறித்து ஆய்வு நடத்த மத்திய குழு தமிழகம் வருகை, ஓ.பன்னீர்செல்வம்

October 12, 2017 210Views
டெங்கு குறித்து ஆய்வு நடத்த மத்திய குழு தமிழகம் வருகை, ஓ.பன்னீர்செல்வம்

டெங்கு குறித்து ஆய்வு நடத்த மத்தியக்குழு ஒரிரு நாளில் தமிழக வர உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதர் மோடியை சந்தித்த பின் தமிழகம் வந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்தித்தோம்.தமிழக அரசின் திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி குறித்தும் மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். அதிமுக சட்டவிதிப்படி பொதுக்குழுவின் முடிவுகளே இறுதியானது. அதன்படியே கட்சி செயல்படும். அதன் அடிப்படையில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என்று தெரிவித்த பன்னீர்செல்வம் ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அதன் பணிகளை தொடங்குவோம் என்றும் கூறினார்.