close
முகப்புடெங்கு குறித்த சந்தேகங்களை கேட்டறிவதற்கு கட்டணமில்லா தொலைபேசி சேவை

டெங்கு குறித்த சந்தேகங்களை கேட்டறிவதற்கு கட்டணமில்லா தொலைபேசி சேவை

October 12, 2017 121Views
டெங்கு குறித்த சந்தேகங்களை கேட்டறிவதற்கு கட்டணமில்லா தொலைபேசி சேவை

டெங்கு குறித்த சந்தேகங்களை கேட்டறிவதற்கு உதவியாக, சேலம் அரசு மருத்துவமனையில் கட்டணமில்லா 24 மணி நேர தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன இந்தநிலையில், பொதுமக்கள் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சேலத்தில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதன்படி,1800 -4252 -424 என்ற கட்டண மில்லா 24 மணி நேர தொலைபேசி சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.  இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகினி துவக்கி வைத்தார் இதே போல், குழந்தைகளுக்குகான தீவிர சிகிச்சை பிரிவையும் அவர் தொடங்கி வைத்தார்.