close
முகப்புடெல்லியில் பட்டாசு விற்பனைக்கான தடை தொடரும்: உச்ச நீதி மன்றம் அறிவிப்பு 

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கான தடை தொடரும்: உச்ச நீதி மன்றம் அறிவிப்பு 

October 13, 2017 140Views
டெல்லியில் பட்டாசு விற்பனைக்கான தடை தொடரும்: உச்ச நீதி மன்றம் அறிவிப்பு 

காற்று மாசுபாட்டை குறைக்கும் முயற்சியாக தலைநகர் டெல்லியில் பட்டாசுகள் விற்பனை செய்ய ஏற்கனவே விதித்துள்ள தடை தொடரும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சமீபத்தில், டெல்லியில்  ஏற்பட்ட கடுமையான புகை மூட்டத்தால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதையடுத்து, தலைநகரில் சுற்றுச்சூழலை சீர்படுத்தும் முயற்சிகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம், டெல்லி மற்றும் மத்திய அரசுகள் மேற்கொண்டுள்ளன. 

இதன் ஒருபகுதியாக, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் பேரில், டெல்லி மற்றும் புறநகரில் இம்மாத இறுதி வரை பட்டாசு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனை எதிர்த்து பட்டாசு உரிமையாளர்கள் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதி மன்றம்  பட்டாசு விற்பனைக்கான தடை தொடரும் என உத்தரவிட்டது.