close
முகப்புதஞ்சாவூரில் தொடங்கப்பட்டுள்ள புத்தக திருவிழா

தஞ்சாவூரில் தொடங்கப்பட்டுள்ள புத்தக திருவிழா

July 15, 2017 77Views
தஞ்சாவூரில் தொடங்கப்பட்டுள்ள புத்தக திருவிழா

தஞ்சாவூரில் தொடங்கப்பட்டுள்ள புத்தக திருவிழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக  வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3ஆம் ஆண்டு புத்தக திருவிழா இன்று தொடங்கியது. இதனை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைகண்ணு திறந்து வைத்தார். 

10 நாட்கள் நடைபெற்றும் இந்த புத்தக திருவிழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தங்கள் விற்பனைக்கு வைக்க்பட்டு உள்ளன. கலை ,இலக்கியம் ,வரலாறு, அரசியல், போன்ற புத்தகங்கள், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. 

இவை அனைத்தும் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த  புத்தக கண்காட்சியில்  ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.