close
முகப்புதனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங்கில் நூதன பேரணி

தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங்கில் நூதன பேரணி

July 17, 2017 59Views
தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங்கில் நூதன பேரணி

தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங்கில் மியூசிக் பேண்ட் வாத்தியங்களுடன் சாலையில் நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளை ஒருங்கிணைத்து ‘கூர்க்காலாந்து’ தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா ஈடுபட்டுள்ளது. 

போராட்டம் 32 வது நாளை எட்டியுள்ள நிலையில், நேற்று ஏராளமானோர் பாரம்பரிய உடை அணிந்து, கூர்க்காலாந்து என்ற முழக்கங்களுடன் சாலையில் பேன்ட் வாத்தியங்கள் இசைக்க பேரணியாக சென்றனர். போராட்டம் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.