close
முகப்புதமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் சதவீதம் 99.82: விஜயபாஸ்கர் பெருமிதம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் சதவீதம் 99.82: விஜயபாஸ்கர் பெருமிதம்

January 09, 2018 266Views
தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் சதவீதம் 99.82: விஜயபாஸ்கர் பெருமிதம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் நடைபெறும் பிரசவத்தின் சதவீதம் 99.82 ஆக  உள்ளதாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, சென்னை யானை கவுனியில் மகப்பேறு மருத்துவமனை அமைக்க வேண்டும் என கோரினார். இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எழும்பூர் மருத்துவமனையில் 91 சதவீத படுக்கைகள்  மட்டுமே பயன்பாட்டி உள்ளதாகவும்  திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனையில் 62 சதவீத படுக்கைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

பிற்காலத்தில் தேவை இருப்பின் புதிய மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  தமிழகத்தில் அரசு  மருத்துவமனையில் நடைபெறும் பிரசவத்தின் சதவீதம் 99.82 ஆக உள்ளது என்றும் வேறு எந்த மாநிலமும் இத்தகைய சதவீதத்தை எட்டவில்லை எனவும்  விஜயபாஸ்கர் தெரிவித்தார்.