close
முகப்பு தமிழகத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்: நடிகர் சிவக்குமார்

தமிழகத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்: நடிகர் சிவக்குமார்

January 13, 2018 220Views
 தமிழகத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்: நடிகர் சிவக்குமார்

தமிழகத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

பொள்ளாச்சி அடுத்த சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  இலக்கிய மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.  இதில், நடிகர் சிவக்குமார கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளிடையே உரையாற்றினார். இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், மொழி பாடங்கள் கட்டாயமாக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.  ஆனால் தமிழகத்தில் தமிழை படிக்காமல்  வேறு மொழிகளில் படித்தால் தான்,    வேலை வாய்ப்பு கிடைக்கும் என தவறான புரிதல் உள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.  எனவே, தமிழை ஒன்றாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்சி வரையாவது கட்டாய பாடமாக்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.