close
முகப்புதமிழகத்தில் ரூ. 1000 கோடி மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ரூ. 1000 கோடி மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

January 13, 2018 219Views
தமிழகத்தில் ரூ. 1000 கோடி மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

விவசாயிகளுக்கு உயிராக இருக்கும் தண்ணீரை, ஒரு சொட்டு கூட வீணாகாமல் தடுக்கும் வகையில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் பழனிச்சாமி இன்று கலந்து கொண்டார். இதில், மேட்டூர் அணைப்பூங்காவில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட காவிரி தீர்ப்பு நினைவுத்தூணை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  குடிமராமத்து எனும் திட்டம் தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக 1,519 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், 2-ம் கட்டமாக 2,065 ஏரிகளை தூர் வார 331 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், அடுத்த சில வாரங்களில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.