close
முகப்புதமிழக மாணவர்களின் உரிமைக்காக அதிமுக எப்போதும் போராடும் : தம்பி துரை

தமிழக மாணவர்களின் உரிமைக்காக அதிமுக எப்போதும் போராடும் : தம்பி துரை

July 15, 2017 105Views
தமிழக மாணவர்களின் உரிமைக்காக அதிமுக எப்போதும் போராடும் : தம்பி துரை

நீட் விவகாரம் தொடர்பாக அதிமுக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் எனவும் தமிழக மாணவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், துணை சகாநாயகருமான தம்பி துரை கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில்  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர் தமிழகத்தில் நீட் பிரச்சினைக்கு திமுகவும், காங்கிரஸ் கட்சியுமே காரணம் எனவும் தற்போது அந்த இரு கட்சிகளும்  நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்கமுடியாது என தெரிவித்தார்.

தமிழகத்திற்கு தேவையான பொறியியல் மற்றும்  மருத்துவ மாணவர்களை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் ஆனால் மத்திய அரசு அனைத்து  அதிகாரத்தையும்  எடுத்து செல்ல முயல்வதாகவும், இது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் தமிழகம் முனிசிபாலிட்டியாக மாறாக கூடாது என கூறினார்.

மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசால்  பறிக்கப்படுவதாகவும் மத்திய அரசிடம் தமிழகம் பிச்சை எடுக்க முடியாது எனவும் தம்பிதுரை தெரிவித்தார் நீட் விவகாரம் கோர்ட்டிற்கு சென்று விட்டதால் மத்திய அரசை அதிமுகவால் வலியுறுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், இருந்தாலும் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில்  குரல்  எழுப்பபடும் எனவும் தமிழக மாணவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க அனைத்து முயற்சிகளும் அதிமுக மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் அதிமுகவில் ஓரே அணிதான் இருக்கிறது, பல அணிகள் இருப்பதாக ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துவதாகவும், அனைத்து நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார். 

நடிகர் கமல் அரசியலுக்கு வந்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும், ஆட்சியில்  தவறுகள் இருந்தால் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டும் எனவும் அதிமுக மக்களுக்கு மட்டுமே பயப்படுகிறது மற்ற கட்சிகளுக்கு பயப்படாது எனவும் தம்பிதுரை கூறினார்.