close
முகப்புதற்காப்பை விட தன்மானமே முக்கியம்: நடிகர் கமல் ஆவேசம்

தற்காப்பை விட தன்மானமே முக்கியம்: நடிகர் கமல் ஆவேசம்

தற்காப்பை விட தன்மானமே முக்கியம்: நடிகர் கமல் ஆவேசம்

முரசொலி பத்திரிக்கையின் பவளவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல், வைரமுத்து உள்ளிட்டோர் நெகிழ்ச்சி உரை ஆற்றினர்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் 75 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பவள விழா கொண்டாடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பவள விழா கொண்டாட்டத்தில், நடிகர் கமல், ரஜினி, கவிஞர் வைரமுத்து, தினதந்தி அதிபர் பாலசுப்ரமணியன், பத்திரிகையாளர் இந்து ராம், நக்கீரன் ஆசிரியர் கோபால், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினமலர் ஆசிரியர் ரமேஷ், ஆனந்த விகடன் மேலண் இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

இந்த விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், மேடையில் பேசுவதற்கு தயக்கமாக இருந்தாலும் தற்காப்பை விட தன்மானமே முக்கியம் என்று மேடை ஏறி விட்டேன். திராவிடம் முடிந்துவிட்டது என்று சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 'ஜன கன மன'வில் திராவிடம் இருக்கும் வரையில், இங்கு திராவிடம் இருக்கும் என்று ஆவேசமாக பேசினார்.