close
முகப்புதவான் சதத்தால் இந்திய அணி 329 ரன்கள் குவிப்பு

தவான் சதத்தால் இந்திய அணி 329 ரன்கள் குவிப்பு

தவான் சதத்தால் இந்திய அணி 329 ரன்கள் குவிப்பு

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி  6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்துள்ளது. 

இந்தியா-இலங்கை மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பல்லேகலேயில் (PALLEKELE) இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்க் தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் ராகுல் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் அணியின் ஸ்கோர் 188 ஆக இருந்த போது ராகுல் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய புஜாரா 8 ரன்களில் ஆட்டமிழந்துஅதிர்ச்சியளித்தார். சிறப்பாக விளையாடிய தவான் சதம் அடித்தார், தவான் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி  42 ரன்களிலும், ரஹானே 17 ரன்னிலும், ரவிசந்திர அஸ்வின் 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இன்றைய நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய வீரர்கள் சகா 13 ரன்னிலும், பாண்டையா 1 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக புஷ்பாகுமாரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.