close
முகப்புதாய்லாந்து மன்னர் மறைந்ததன் முதலாமாண்டு நினைவுதினம் இன்று 

தாய்லாந்து மன்னர் மறைந்ததன் முதலாமாண்டு நினைவுதினம் இன்று 

October 13, 2017 254Views
தாய்லாந்து மன்னர் மறைந்ததன் முதலாமாண்டு நினைவுதினம் இன்று 

தாய்லாந்து மன்னர் புமிபோல் அபுல்யதே மறைந்ததன் முதலாமாண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தாய்லாந்து சக்ரி வம்சத்தின் 9-வது மன்னரான புமிபோல் அபுல்யதே, கடந்தாண்டு அக்டோபர் 13ஆம் தேதியன்று காலமானார்.  88 வயது வரை துடிப்பான மன்னராக திகழ்ந்த இவர், ’தாய்லாந்தை ஆட்சி செய்த மன்னர்களிலேயே மிகவும் நீண்ட நாள் நல்லாட்சி புரிந்தவர்’ என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் 126 நாட்கள் மன்னராக ஆட்சி புரிந்த அபுல்யதே, 30 பிரதமர்களுடன் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். 

இவர் மறைந்ததன் முதலாமாண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு 199 புத்த மத துறவிகள் பொதுமக்களிடமிருந்து ஈகை பெறும் நிகழ்வு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. பின்னர், அபுல்யதே மன்னரின் நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கான தாய்லாந்து மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

மேலும், மன்னரின் உருவம் பதித்த சீருடைகளை அணிந்துகொண்டு தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.