close
முகப்புதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பர்தாயப்படி புதிய கணக்கு தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பர்தாயப்படி புதிய கணக்கு தொடக்கம்

July 17, 2017 83Views
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பர்தாயப்படி புதிய கணக்கு தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழ் முறைப்படி ஆனி மாதத்தின் கடைசி நாள் அன்று ஆனிவார ஆஸ்தானம் என்ற பெயரில் வருடாந்திர கணக்குகள் முடிக்கப்பட்டு புதிய கணக்குகள் தொடக்கப்பட்டது. 

திருப்பதி தேவஸ்தானத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சம்பர்தாயப்படி ஆனி மாதத்தின் கடைசி நாளில் ஆனி வார ஆஸ்தானம் பூஜைகள் செய்யப்பட்டு புதிய கணக்குகள் ஆரம்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் அணில் குமார் சிங்கால் ஒரு ரூபாய் நாணயத்தை ஒரு துணியில் வைத்து கட்டி, புதிய கணக்கை சம்பர்தாய முறைப்படி தொடக்கி வைத்தார். பின்னர் சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத மலையப்ப சுவாமி அலங்கரிக்கப்பட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.இதில் செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் ரவிகிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இன்று மாலை புஷ்ப பல்லக்கில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளனர்.