close
முகப்பு திருப்பூர் நொய்யல் ஆற்றினை சுத்தப்படுத்தும் பணி தீவிரம் 

திருப்பூர் நொய்யல் ஆற்றினை சுத்தப்படுத்தும் பணி தீவிரம் 

October 12, 2017 125Views
 திருப்பூர் நொய்யல் ஆற்றினை சுத்தப்படுத்தும் பணி தீவிரம் 

திருப்பூர் நொய்யல் ஆற்றினை சுத்தப்படுத்தும் பணி முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.

திருப்பூர், கோவை, கரூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதரமாக விளங்கி வந்த நொய்யல் நதி காலப்போக்கில் மாசடைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழையின்போது நொய்யல் ஆற்றில் நுரையுடன் கூழிய கழிவு நீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் கடந்த 4-ஆம் தேதி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அணைத்து தொழில் கூட்டமைப்பு சார்பில் நொய்யல் ஆற்றினை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது . 

முதற்கட்டமாக மாநகரப்பகுதியில் 9 கிலோ மீட்டர் வரை நொய்யலின் இரு கரைகளிலும் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி  நடைபெற்றது.