close
முகப்புதெர்மாகோலுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ தொகுதி மக்கள் போராட்டம்

தெர்மாகோலுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ தொகுதி மக்கள் போராட்டம்

July 17, 2017 57Views
தெர்மாகோலுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ தொகுதி மக்கள் போராட்டம்

கையில் தெர்மாகோலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுஅமைச்சர் செல்லூர் ராஜூ தொகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். 

மதுரை மாவட்டம் அண்ணா நகர்  பகுதியில் ஏராளமான  பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சாக்கடை வசதி மற்றும் கால்வாய் வசதி சரிவர இல்லை என கூறப்படுகிறது.இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு,மலேரியா உள்ளிட்ட பல நோய்களால்  பாதிப்படைவதாக குற்றம்சாற்றுகின்றனர்.  

எனவே அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டி கையில் தெர்மாகோலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை  அண்ணாநகர் பகுதி அமைச்சர் செல்லூர் ராஜூ தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.