close
முகப்புதேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய நிதிஷ்குமாருக்கு பாஜக தலைமை அழைப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய நிதிஷ்குமாருக்கு பாஜக தலைமை அழைப்பு

August 13, 2017 39Views
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய நிதிஷ்குமாருக்கு பாஜக தலைமை அழைப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. 

பாஜக தேசிய தலைவர் அமீத் ஷா, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் பேசிய அமீத் ஷா, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்ததாக கூறினார். 

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு அமீத் ஷா அழைப்பு விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பீகாரில் பாஜக ஆதரவுடன் ஆட்சியை பிடித்த நிதிஷ்குமார், அம்மாநில பாஜக தலைவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.