close
முகப்புதேனி அருகே போலி பெண் மருத்துவர் கைது 

தேனி அருகே போலி பெண் மருத்துவர் கைது 

October 11, 2017 152Views
தேனி அருகே போலி பெண் மருத்துவர் கைது 

தேனி அருகே போலி மருத்துவரை பிடித்த கண்காணிப்பு குழுவினர்  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் தேவதானபட்டி பகுதியில் எழிசம்மாள் என்ற பெண் ஒருவர், தனது வீட்டில் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை இயக்குநர்  செல்வராஜ்  மற்றும் கண்காணிப்பு குழுவினர்,  எழிசம்மாள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

 இந்த சோதனையில், அவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து எழிசம்மாளை கைது செய்த அதிகாரிகள்,  மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை  தேவதானபட்டி  போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.