close
முகப்புதேர்தல் அதிகாரியைமாற்றுவதால் நடந்த தவறு சரியாகிவிடுமா? விஷால் கேள்வி 

தேர்தல் அதிகாரியைமாற்றுவதால் நடந்த தவறு சரியாகிவிடுமா? விஷால் கேள்வி 

December 06, 2017 399Views
தேர்தல் அதிகாரியைமாற்றுவதால் நடந்த தவறு சரியாகிவிடுமா? விஷால் கேள்வி 

தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்றுவதால் மட்டும் நடந்த தவறு சரியாகிவிடுமா? என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அண்ணா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

வேட்பு மனு தாக்கல் நிராகரிக்கப்பட்டது ஏன் என எனக்கே தெரியவில்லை. வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதாலேயே அவர்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர், நான் யாரையும் சார்ந்து போட்டியிடவில்லை. 

சுயேட்சையாக தான் நிற்கிறேன். மக்களுக்கு நல்லது செய்வதற்கு இவ்வளவு எதிர்ப்புகள் வரும் என தயாரிப்பாளர் சங்கத்தில் தான் பார்த்துள்ளேன். நான் தெலுங்கு மக்களுக்கு ஆதரவாக தினகரனுக்கு ஆதரவாக போட்டியிடுகிறேன் என கூறுவது குற்றச் சாட்டு.நான் இந்தியனாகவே நிற்க முயற்சித்தேன். தெலுங்கு மக்களின் வாக்குகளுக்காக  இல்லை. மக்களுக்கு நல்லது செய்யவே முயற்சித்தேன்.

நான் தேர்தலில் போட்டியிடுவதற்கு பின்னணியில் தினகரனோ, கமல்ஹாசனோ, திமுகவோ இல்லை, நான் அரசியல் கட்சி தொடங்குவேனா என்பதை அவர்களே (மக்கள்) முடிவு செய்யட்டும்; எனக்கு என்ன நேர்ந்தது என்பதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

எதிர்காலத்தில் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன், பேசிக்கொண்டிருக்கும்போதே தேர்தல் அதிகாரி அடிக்கடி வெளியே சென்று தொலைபேசியில் பேசினார்.
தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்றுவதால் மட்டும் நடந்த தவறு சரியாகிவிடுமா? என தெரிவித்தார்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பாக விஷால் ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு முறையீடு செய்துள்ளார் 

To the people, I look upto, Hon @narendramodi & Hon @rashtrapatibhvn

I am Vishal,I hope u r aware of wats happening in the RK Nagar Election process in Chennai.

My nomination was accepted & later rejected. Totally unfair. I bring this to your notice & I hope justice prevails.

— Vishal (@VishalKOfficial) December 6, 2017