close
முகப்புதேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி 

தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி 

November 11, 2017 206Views
தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி 

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் உள்ள அக்சர்தாம் கோயிலில் இருந்து 3 நாள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

குஜராத் மாநில சட்டசபையின் பதவிக் காலம் ஜனவரி 22-ம் தேதி முடிவடைகிறது. குஜராத்தின் 182 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன. 

முதல் கட்டம் 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ம் தேதியும் 2-வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. 

இந்த தேர்தலையொட்டி, அனைத்து கட்சித்தலைவர்களும் மாநிலத்தை முற்றுகையிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காந்தி நகரில் உள்ள அக்சர்தாம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், தனது 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.