தைத் திருநாளான இன்று அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. இங்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக கடந்த ஒரு வாரமாக முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
அவனியாபுரத்தில் இன்றைக்கும், பாலமேட்டில் 15-ந் தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் 675 வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதேபோல் அவனியாபுரத்தில் 954 காளைகள் பங்கேற்க உள்ளன. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க உள்ள நிலையில், பார்வையாளர்கள் ஏராளமானோர் குவியத் தொடங்கி உள்ளனர்.