close
முகப்புநாடு கடத்துவது தொடர்பான வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் விஜய்மல்லையா ஆஜர்

நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் விஜய்மல்லையா ஆஜர்

நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் விஜய்மல்லையா ஆஜர்

நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் விஜய்மல்லையா ஆஜரானார்.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அவர் மீது சி.பி. ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வருவதாக இந்தியா சார்பில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டால், மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவார். அங்கு போதிய வசதிகள் உள்ளன என இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் விஜய்மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களையும், வாத பிரதிவாதங்களையும் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.