close
முகப்புநாட்டின் 13வது குடியரசு துணைத்தலைவராக பதவியேற்றார் வெங்கையா நாயுடு

நாட்டின் 13வது குடியரசு துணைத்தலைவராக பதவியேற்றார் வெங்கையா நாயுடு

நாட்டின் 13வது குடியரசு துணைத்தலைவராக பதவியேற்றார் வெங்கையா நாயுடு

நாட்டின் 13வது குடியரசு துணைத்தலைவராக வெங்கையா நாயுடு பதவி ஏற்றார். இந்த விழாவில் பிரதமர், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரியின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, புதிய குடியரசு துணைத்தலைவர் பதவி ஏற்பு விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்க, 13வது குடியரசு துணைத்தலைவராக வெங்கையா நாயுடு பதவி ஏற்றார்.

குடியரசு துணைத்தலைவர் பதவி ஏற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.