close
முகப்புநான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி: கமல்ஹாசன் 

நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி: கமல்ஹாசன் 

November 05, 2017 407Views
நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி: கமல்ஹாசன் 

நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ரசிகர்கள் சந்திப்பில் பேசிய அவர், நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி. 
கட்சி தொடங்குவதற்கான முதல் பணிதான் மொபைல் செயலி. நவ.7-ம் தேதி மொபைல் செயலியின் பெயரும் செய்முறை விளக்கமும் அறிமுகம் செய்யப்படும். ஆர்வக் கோளாறில் பதவிக்காக நான் அரசியலை கையிலெடுக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும், இது ஆரம்ப கூட்டம்தான்; இதுபோன்று இன்னும் 50 கூட்டங்களை நடத்த வேண்டும். பணக்காரர்கள் மட்டும் வரி கட்டினால் போதும் நாடு சரியாகிவிடும். இங்கிருக்கும் கூட்டம் மன்னர் முன் கையேந்தும் கூட்டம் இல்லை. கையேந்துபவன் நான். தமிழ்நாட்டுக்காக ஏந்துகிறேன்.  நான் அடி வாங்கிக் கொள்கிறேன். ஆனால் அடிக்கடி தட்ட நான் மிருதங்கம் இல்லை. என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திருட்டுத்தனம் செய்பவர்கள் பெரிய மனிதர்களைப் போல் நடந்துக் கொள்வதை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. கோவில்களை இடிக்க வேண்டும் என நான் சொன்னதில்லை. அவை நமது கட்டடம். சரித்திரத்தை திரும்பி பார்க்காமல் செய்த தவறுகளை திரும்ப செய்து கொண்டிருக்கிறோம். 

நான் ஜெயிலுக்கு போவதில் எந்த அவமானமும் இல்லை, நான் திருடிவிட்டா செல்லப் போகிறேன். அதனால் தயாராகவே இருக்கிறேன். மதத்தின் பெயரால் மருந்து என சொல்லிக் கொண்டு விசம் தருவதை அருந்தாதீர்கள். என தெரிவித்தார்.