close
முகப்புநாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை(ஜூன் 17) தொடங்குகிறது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு தெரிவித்துள்ள தகவலில், நாளை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரின் போது ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, மாட்டிறைச்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து முன்னதாகவே எதிர்கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைப்பெற்ற அனைத்துகட்சி கூட்ட ஆலோசனையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நாளை குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் ஆரம்பமாக உள்ளது.